/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
ADDED : ஜூலை 11, 2024 10:20 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மா.பொ.சி., நகர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ், 55. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் மொபைல்போன் மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடைக்கு சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது விற்பனைக்கு வைத்திருந்த, எட்டு மொபைல்போன்கள், 12 கை கடிகாரங்கள், சென்ட் பாட்டில்கள், 1,500 ரூபாய் உட்பட 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.