/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஹோட்டல் ஊழியரை வெட்டி மொபைல் பறித்த கொள்ளையர்கள் ஹோட்டல் ஊழியரை வெட்டி மொபைல் பறித்த கொள்ளையர்கள்
ஹோட்டல் ஊழியரை வெட்டி மொபைல் பறித்த கொள்ளையர்கள்
ஹோட்டல் ஊழியரை வெட்டி மொபைல் பறித்த கொள்ளையர்கள்
ஹோட்டல் ஊழியரை வெட்டி மொபைல் பறித்த கொள்ளையர்கள்
ADDED : ஜூலை 07, 2024 01:25 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கூட்டுச்சாலையில் உணவகம் நடத்தி வருபவர் இளையராஜா, 37. இவரது கடையில், பணிபுரிந்து வருபவர், ரமேஷ், 25. இவர் அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பணிமுடிந்து, சக ஊழியர்கள் இருவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சிங்கிலிமேடு கிராம சாலை அருகே செல்லும்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ரமேஷ் மற்றும் ஊழியர்களை வழி மறித்து அரிவாளை காட்டி, பணம் கேட்டு மிரட்டியது.
தர மறுத்த ரமேஷை தலை மற்றும் காதில் வெட்டி விட்டு, அவர் வைத்திருந்த மொபைல் போனை பறித்தது. ரமேஷூடன் வந்த ஊழியர்கள் சத்தம் போடவே வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து தப்பினர்.
ரமேஷ் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காது பகுதி அறுந்து தொங்கியதால், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். வழிப்பறி கொள்ளையர்களை பொன்னேரி போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன், தடப்பெரும்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வியாபாரி ஒருவரை, அரிவாளால் வெட்டி பணம் பறித்து செல்லப்பட்டது. தற்போது ஹோட்டல் ஊழியர் அரிவாளால் வெட்டுப்பட்டு உள்ளார். அடுத்தடுத்த வழிப்பறி சம்பவங்கள் கிராமவாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.