/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரூ.5,000 மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது ரூ.5,000 மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ரூ.5,000 மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ரூ.5,000 மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ரூ.5,000 மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ADDED : ஜூலை 21, 2024 06:54 AM

செங்குன்றம்: புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 47. இவர், பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வரும் கடை நடத்தி வருகிறார்.
இவரிடம், நேற்று முன்தினம் ரவுடிகள் ஐந்து பேர் மாமூல் கேட்டு மிரட்டி, 5,000 ரூபாய் பறித்து சென்றனர்.
இது குறித்து, புழல் காவல் நிலையத்தில் ஜெயகுமார் புகார் அளித்தார். புளியந்தோப்பைச் சேர்ந்த ராம்குமார், 32, ரூபன், 35, டேவிட் பிரசாந்த், 20, புழலைச் சேர்ந்த மணிகண்டன், 29, மற்றும் விக்னேஷ்வரன், 29, என்பது தெரிய வந்தது.
ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் 2,000 ரூபாய் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.