/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சடலங்களை எடுக்க உதவியவர் ரயில் மோதி உயிரிழப்பு சடலங்களை எடுக்க உதவியவர் ரயில் மோதி உயிரிழப்பு
சடலங்களை எடுக்க உதவியவர் ரயில் மோதி உயிரிழப்பு
சடலங்களை எடுக்க உதவியவர் ரயில் மோதி உயிரிழப்பு
சடலங்களை எடுக்க உதவியவர் ரயில் மோதி உயிரிழப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:40 AM
சென்னை: கொருக்குப்பேட்டையில் ரயில் மோதி இறப்பவர்களின் சடலங்களை எடுக்க உதவி வந்தவர், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 47; திருமணமாகாதவர். ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் சடலங்களை எடுப்பதில் ரயில்வே போலீசாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார். ரயிலில் கடத்தப்படும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யும் போதும், போலீசாருக்கு உதவியாக இருந்தார்.
இவர் பெரும்பாலான நேரங்களில் ரயில் நிலைய நடைமேடைகளில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் ரயில்வே கேட் அருகே இயற்கை உபாதை கழிக்க, ரயில் தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றார். அப்போது, ரயிலில் அடிபட்டு இறந்தார். இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.