/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உறுப்பு தானம் செய்தவர் உடல் நல்லடக்கம் உறுப்பு தானம் செய்தவர் உடல் நல்லடக்கம்
உறுப்பு தானம் செய்தவர் உடல் நல்லடக்கம்
உறுப்பு தானம் செய்தவர் உடல் நல்லடக்கம்
உறுப்பு தானம் செய்தவர் உடல் நல்லடக்கம்
ADDED : ஜூலை 11, 2024 12:59 AM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 45. இவர், அம்பத்துார் அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வண்டலுாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்த பாபு, மூளைசாவு அடைந்துள்ளார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. பின், அவரது உறவினர்களின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
நேற்று அவரது உடல், பள்ளிப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது அவரது உடலுக்கு, திருத்தணி கோட்டாட்சியர் தீபா, மரியாதை செலுத்தினார்.