/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குற்றவாளி ரகளை இருவருக்கு கத்திக்குத்து குற்றவாளி ரகளை இருவருக்கு கத்திக்குத்து
குற்றவாளி ரகளை இருவருக்கு கத்திக்குத்து
குற்றவாளி ரகளை இருவருக்கு கத்திக்குத்து
குற்றவாளி ரகளை இருவருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூன் 04, 2024 06:16 AM
சென்னை, : சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 30. கடந்த ஆண்டு நான்கு பேர் கும்பலால் ராஜேஸ்வரி கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி, 24, சக்திவேல், ஜெகதீஷ், ஜான் சூர்யா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், சக்திவேல், 27, என்பவர் ஜாமினில், சிறையில் இருந்து வெளிவந்தார். இவரும், இவரது தம்பி தினேஷ், 26, என்பவரும் நேற்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்தனர்.
அப்போது, ராஜேஸ்வரியின் ஆதரவாளர் பார்த்திபன், 27, சக்திவேலிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த கத்தியால், பார்த்திபனை துரத்திச் சென்று தலையில் வெட்டினார். அதன்பின் தப்பியோடினார்.
பின், மாம்பலம் ரயில் நிலையம் சைக்கிள் ஸ்டாண்டில், இருந்த சக்திவேலின் வளர்ப்பு தாய் கஸ்துாரியிடம், சக்திவேல் குறித்து விசாரித்தனர். அப்போது, அங்கு சக்திவேல் மற்றும் தினேஷ் வந்தனர். மூவரையும் சக்திவேல் கத்தியுடன் துரத்தினார். இதில் அரவிந்தின் இடது காதில் வெட்டு விழுந்தது. சக்திவேல் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.