/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சோதனை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சோதனை
திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சோதனை
திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சோதனை
திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சோதனை
ADDED : ஜூலை 26, 2024 08:06 PM
திருத்தணி:திருத்தணி தாலுகாவில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் பிரபுசங்கர் களஆய்வு நடத்தினார்.
அந்த வகையில், திருத்தணி பேருந்து நிலையத்தில் துாய்மை பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின், திருத்தணி பெரியார் நகரில் உள்ள பசுமை உரக்குடில் பகுதியில், கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது, நுண்ணுரம் தயாரிப்பது பற்றியும், மட்கும் குப்பையை அரைத்து கொட்டப்பட்ட தொட்டியை ஆய்வு செய்தார். அதன்பின், மரக்கன்று களை நடவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மலர்விழி, நகராட்சி ஆணையர் அருள் உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.