Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

ADDED : ஆக 04, 2024 11:36 PM


Google News
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார், 26. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்றவர் இரவு தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி வளைவு அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us