/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
ADDED : ஜூலை 18, 2024 01:08 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், தொடுகாடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திநகர், செங்காடு, ஆயக்கொளத்துார், என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது,
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், செங்காடு, காந்திநகர், போளிவாக்கம் சத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மேல்நல்லாத்துார், மணவாளநகர், மற்றும் திருவள்ளூர் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இலவச பயண அட்டை இருந்தும் சில நேரங்களில் பணம் கொடுத்து தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் செல்லும் அவலநிலை உள்ளது.
மேலும், பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில், மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.