/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வங்க கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்க கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 06:07 AM
மீஞ்சூர்: வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயல் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தியது.
இன்று ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும் எனவும், அதனால்,தமிழக கடலோர மாவட்டங்களில் மழைபொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துஇருந்தது.
இதனால், தமிழக கடலோர பகுதிகளில், 35 - 45 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இடை இடையே, 65 கி.மீ., வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகத்தில், 1ம் எண் கூண்டுஏற்றப்பட்டது.