/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புயலால் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம் புயலால் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம்
புயலால் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம்
புயலால் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம்
புயலால் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூன் 17, 2024 03:49 AM

திருவள்ளூர் : ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி வரையிலும் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு கால்வாய்கள் மிக்ஜாம் புயலால் பல பகுதிகளில் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படும் நீர் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 25 கி.மீ., துாரமுள்ள சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை 12 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கிருஷ்ணா கால்வாய் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்குவதற்குள் கிருஷ்ணா கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.