/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தடப்பெரும்பாக்கத்தில் சிறுபால பணிகள் மந்தம் தடப்பெரும்பாக்கத்தில் சிறுபால பணிகள் மந்தம்
தடப்பெரும்பாக்கத்தில் சிறுபால பணிகள் மந்தம்
தடப்பெரும்பாக்கத்தில் சிறுபால பணிகள் மந்தம்
தடப்பெரும்பாக்கத்தில் சிறுபால பணிகள் மந்தம்
ADDED : ஜூன் 23, 2024 03:53 AM

பொன்னேரி, : பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் இருந்து கொடூர் வழியாக கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில், மழைநீர் செல்வதற்காக சிறுபாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டன.
இதற்காக சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி, கான்கிரீட் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடக்கின்றன.சாலையின் ஒரு பகுதியில் சிறுபாலத்திற்கான கட்டுமானம் முடிந்த நிலையில், மற்றொரு பகுதி பள்ளம் வெட்டப்பட்டு திறந்த நிலையில் இருக்கிறது.
கட்டுமான பணிகள் முடிந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது தடுமாற்றம் அடைகின்றன. பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகு சாலையும் கரடு, முரடாக இருக்கிறது.
இதனால் சிறிய கார்களின் அடிப்பகுதிகள் சேதம் அடைவதுடன், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
மேலும், பணிகள் மேற்கொள்ளப்படாமல் திறந்த நிலையில் இருக்கும் பள்ளத்தில் வாகனங்கள் தவறி விழந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட சிறுபாலப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.