/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளால் சாலை சீரமைப்பதில் மெத்தனம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளால் சாலை சீரமைப்பதில் மெத்தனம்
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளால் சாலை சீரமைப்பதில் மெத்தனம்
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளால் சாலை சீரமைப்பதில் மெத்தனம்
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளால் சாலை சீரமைப்பதில் மெத்தனம்
ADDED : ஜூன் 11, 2024 04:04 PM
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 440 தெருக்கள் உள்ளன. நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் 110 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திருத்தணி நகருக்கு கொண்டு வருவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.
இதையடுத்து, நகராட்சியில், கூட்டுக்குடிநீர் வீடுகளுக்கு வினியோகம் செய்வதற்கு மேற்கண்ட அனைத்து தெருக்களிலும் ராட்சத குழாய்கள் புதைத்தும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கும் தனியாக குழாய்கள் புதைக்கப்பட்டன.
இதனால், நகராட்சியில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், நகராட்சியில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதற்கு, 20 கோடி ரூபாய் தேவை என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பரிந்துரை கடிதம் அனுப்பியது. இந்நிலையில் முதற்கட்டமாக, 15 சாலைகள் சீரமைப்பதற்கு சாலை நகர்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் 15வது மத்திய, மாநில நிதிக்குழு மூலம், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நான்கு தார்ச்சாலைகள், 11 சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் வினியோகம் திட்டப் பணி முழுமையாக முடியாமல் தற்போதும் சாலைகளில் பள்ளம் தோண்டி, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடப்பதால், சாலைகள் சீரமைப்புகள் மேற்கொள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மெத்தனமாக நடப்பதால் சாலைகள் சீரமைப்பது மேலும் தாமதம் ஆகிறது. எனவே மாவட்ட கலெக்டர் தலையீட்டு கூட்டுக்குடிநீர் பணிகள் விரைந்து முடிக்கவும், சாலைகள் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர மக்கள் எதிர்பார்கின்றனர்.
*****