/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துப்பாக்கி சுடுதல் போட்டி - டேக் லைன் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனையர் அசத்தல் துப்பாக்கி சுடுதல் போட்டி - டேக் லைன் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனையர் அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி - டேக் லைன் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனையர் அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி - டேக் லைன் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனையர் அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி - டேக் லைன் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனையர் அசத்தல்
ADDED : ஜூன் 17, 2024 03:45 AM

சென்னை, : பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கான, தேசிய அளவிலான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டியில், முதல் நாளில் எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனையர், முதலிடம் பெற்று அசத்தினார்.
காவல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி வளாகத்தில், பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கான, தேசிய அளவிலான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது.
குஜராத், ம.பி., மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் மத்திய காவல் படை, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் என, 30 அணிகளை சேர்ந்த, 634 வீராங்கனையர் களமிறங்கி உள்ளனர்.
l முதல் நாளான நேற்று, கைத்துப்பாக்கி சுடும் போட்டி எண்: 1ல், 15 மீட்டர் ஸ்குவாட்டிங் போட்டியில், எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை, கான்ஸ்டபிள் பாராமிலா முதல் இடத்தை பிடித்தார். தமிழக காவல் துறையின் எஸ்.ஐ., துர்கா இரண்டாம் இடத்தையும்; அசாம் மாநில காவல் துறை கான்ஸ்டபிள் இட்டு புயான், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்
l ரைபிள் சுடும் போட்டி எண்: 1ல், 100 மீட்டர் ஸ்டாண்டிங் போட்டியில், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை வெர்சா ராவத் முதல் இடத்தையும், குஜராத் மாநில காவல் துறை வீராங்கனை நிமிஷாபென் கே ராவாலியா இரண்டாம் இடத்தையும், தமிழக காவல் துறையைச் சேர்ந்த ஏட்டு ராதிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்
l கைத்துப்பாக்கி சுடும் போட்டி எண்: 2ல், 25 மீட்டர் குயிக் ரிப்ளெக்ஸ் போட்டியில், எல்லைப் பாதுகாப்பு படையின் கான்ஸ்டபிள் பாராமிலா முதல் இடத்தையும், கான்ஸ்டபிள் மீனாட்சி சந்தர் இரண்டாம் இடத்தையும், தமிழக காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பாரதி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்
l ரைபிள் சுடும் போட்டி எண்: 2ல், 200 மீட்டர் நீலிங் போட்டியில், அசாம் ரைபிள்ஸ் கான்ஸ்டபிள் மட்டாவதி சாந்திபால் முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சுனிதா இரண்டாம் இடத்தையும், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனை நிர்மலா தாரகி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
துப்பாக்கி சுடும் போட்டி வரும், 19ம் தேதி நரை நடக்கிறது. வெற்றி வாகை சூடுவோருக்கு, வரும் 20ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பரிசு மற்றும் பதக்கம் வழங்க உள்ளார்.