/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கால்வாயில் தேங்கும் கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம் கால்வாயில் தேங்கும் கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம்
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம்
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம்
கால்வாயில் தேங்கும் கழிவுநீர் ஊத்துக்கோட்டையில் துர்நாற்றம்
ADDED : ஜூலை 19, 2024 02:00 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள கால்வாய் வழியே செல்கிறது.
இந்த கால்வாய்கள் கட்டி, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஆங்காங்கே, பழுதடைந்து காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் கால்வாயில் மூடி இல்லாததால், குப்பை சேர்கிறது.
இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல், ஆங்காங்கே தேங்குகிறது. இதில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதால், கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் பேரூராட்சியில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.