/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் நீர்வளத்துறை புகார்
ADDED : ஜூலை 27, 2024 07:10 AM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, பொதுப் பணித்துறையின் நீர் வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் கால்வாய், தாமரை ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த மழைநீர் கால்வாயில் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடப்படுவதால், தாமரை ஏரி மாசு அடைந்து, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
இதையடுத்து புறவழிச்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயை கண்காணிக்கும் பணியில், நீர்வளத்துறையின் உதவிப் பொறியாளர் கண்ணன் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம், சிப்காட் மேம்பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் கால்வாயில், தனியார் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் திறக்கப்பட்டது.
லாரியை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து வேகமாக லாரி புறப்பட்டு சென்றது.
லாரியின் பதிவு எண்ணை குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் உதவிப் பொறியாளர் கண்ணன் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.