/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரைகுறை பாதாள சாக்கடை திட்டப்பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு அரைகுறை பாதாள சாக்கடை திட்டப்பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
அரைகுறை பாதாள சாக்கடை திட்டப்பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
அரைகுறை பாதாள சாக்கடை திட்டப்பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
அரைகுறை பாதாள சாக்கடை திட்டப்பணி பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜூலை 12, 2024 10:39 PM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், கடந்த, 2019 ல் முதல் கட்டமாக, 54.78 கோடி ரூபாயில், 22வார்டுகளில், 41கி.மீ., தொலைவிற்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட்டன.
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், ‛மேன்ஹோல்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியிருப்பு பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், தற்போது பிரதான சாலைகளில், திட்டபணி நடைபெறுகிறது. இதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்படுகிறது.
பணிகள் முடிந்த பின், தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் அரைகுறையாக விடப்படுகிறது. சிறு மழை பெய்தாலும், பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். சாலையில் எந்த நேரத்தில், எங்கு பள்ளம் விழும் என தெரியாமல் தடுமாற்றத்துடனும், அச்சத்துடனும் பயணிக்கின்றனர்.
இந்த பள்ளங்களில் கனரக வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. தற்காலிக தீர்வாக வேறு பகுதியில் உள்ள சகதியை கொண்டு வந்த பள்ளங்கள் மூடப்படுகின்றன.
இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்துகிறது. பணிகள் முடிந்த இடங்களில் வாகனங்கள் தடையின்றி சென்று வருவதற்கு ஏற்ப, பள்ளங்களை மூட வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் குடிநீர் வடிகால் வாரியம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
***