/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செயற்கை கோளை விண்ணில் செலுத்திய பள்ளி மாணவர்கள் செயற்கை கோளை விண்ணில் செலுத்திய பள்ளி மாணவர்கள்
செயற்கை கோளை விண்ணில் செலுத்திய பள்ளி மாணவர்கள்
செயற்கை கோளை விண்ணில் செலுத்திய பள்ளி மாணவர்கள்
செயற்கை கோளை விண்ணில் செலுத்திய பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூன் 01, 2024 06:05 AM

கடம்பத்துார்: கோவை மாவட்டத்தில் உள்ள அன்னுாரில் டார்வின் அறிவியல் கழகம் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் விண்வெளி துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விண்வெளி ராக்கெட் தயாரிப்பு பயிற்சி முகாம் கடந்த 24ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடந்தது.
அன்னுாரில் உள்ள நவ்பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு மாணவர்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 30 அரசு மற்றும் 10 தனியார் பள்ளி என மொத்தம் 40 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் சோதனை நிகழ்ச்சி 26 ம் தேதி நடந்தது.
இதில் தட்பவெப்ப நிலை, காற்றழுத்தம் போன்ற ஒன்பது தரவுகளை அறியும் வகையில் செயற்கை கோள் உருவாக்கப்பட்டது. சுமார் 30 கி. மீ., உயரத்திற்கு விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள் நான்கு மணி நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிரக்கப்பட்டது.
விமானப்படை அனுமதியுடன் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இங்சர் சால் மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.