/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் ரவுடி கைது இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் ரவுடி கைது
இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் ரவுடி கைது
இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் ரவுடி கைது
இளைஞர்களை வெட்டிய சம்பவத்தில் ரவுடி கைது
ADDED : ஜூன் 24, 2024 05:04 AM
படப்பை: சென்னை தாம்பரம் அருகே, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்,35; திருமுடிவாக்கத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்.
இவர் தன் நண்பர்களுடன், வரதராஜபுரம் பகுதியில் கடந்த 16ம் தேதி காரில் சென்றார். அப்போது, இரண்டு 'பைக்'கில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் காரை மறித்து, தினகரனை கத்தியால் வெட்டி, அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், செயினை பறிக்க முயன்றனர்.
தடுக்க வந்த அவரது நண்பர் மணிகண்டன் என்பவரையும் வெட்டினர். அப்போது, தினகரனுடன் வந்த நண்பர்கள் காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்றனர்.இதனால் மர்ம கும்பல், தினகரனின் கார் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின்படி, சோமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், தாம்பரத்தைச் சேர்ந்த ரவுடி சூர்யா,21, மற்றும் அவரது கூட்டாளிகள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, சூர்யாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.