/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'ரோமியோக்கள்' அட்டகாசம் அதிகரிப்பு: மகளிர் பள்ளிகள் அருகே ரோந்து அவசியம் 'ரோமியோக்கள்' அட்டகாசம் அதிகரிப்பு: மகளிர் பள்ளிகள் அருகே ரோந்து அவசியம்
'ரோமியோக்கள்' அட்டகாசம் அதிகரிப்பு: மகளிர் பள்ளிகள் அருகே ரோந்து அவசியம்
'ரோமியோக்கள்' அட்டகாசம் அதிகரிப்பு: மகளிர் பள்ளிகள் அருகே ரோந்து அவசியம்
'ரோமியோக்கள்' அட்டகாசம் அதிகரிப்பு: மகளிர் பள்ளிகள் அருகே ரோந்து அவசியம்
ADDED : ஜூன் 13, 2024 05:44 PM
செங்குன்றம்:
கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் புளியந்தோப்பு, செங்குன்றம், அம்பத்துார், மாதவரம், உள்ளிட்ட இடங்களில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்போர், அரசு பள்ளி மாணவர்களை குறிவைத்து, விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், மாணவியரின் கவனத்தை ஈர்க்க, வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியபடி தெருக்களில் வலம் வருகின்றனர்.
அவர்களின் தொடர் தொல்லையால், ஆரம்பத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் மாணவியர், சில நாட்களில், சந்தர்ப்பவசத்தால் ரோமியோக்களின் மொபைல்போன் தொடர்பில் சிக்கி, படிப்பில், 'கோட்டை' விடுகின்றனர்.
இதனால், அவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி, பாதுகாப்பு குறித்து, மற்றவர்களிடம் சொல்ல முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அந்தந்த பகுதி போலீசார், அரசு மகளிர் பள்ளிகள் உள்ள இடங்களில், காலை, மாலை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
பள்ளி நிர்வாகமும், போலீசாரும், ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டால், அரசு பள்ளி மாணவியரின் நலன் காக்கலாம்.
மேலும் வாரம் ஒருமுறை, மகளிர் போலீசார் மாணவியருடன் கலந்துரையாடி, பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதன் மூலம், மாணவியரின் பாதுகாப்பும், தேர்வில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்.