/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 100 நாள் வேலை கேட்டு கரிம்பேடில் சாலை மறியல் 100 நாள் வேலை கேட்டு கரிம்பேடில் சாலை மறியல்
100 நாள் வேலை கேட்டு கரிம்பேடில் சாலை மறியல்
100 நாள் வேலை கேட்டு கரிம்பேடில் சாலை மறியல்
100 நாள் வேலை கேட்டு கரிம்பேடில் சாலை மறியல்
ADDED : ஜூலை 10, 2024 10:32 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தில், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரி, தொழிலாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பள்ளிப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.