/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிநீர், மின்சாரம் கேட்டு பேரம்பாக்கத்தில் சாலை மறியல் குடிநீர், மின்சாரம் கேட்டு பேரம்பாக்கத்தில் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் கேட்டு பேரம்பாக்கத்தில் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் கேட்டு பேரம்பாக்கத்தில் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் கேட்டு பேரம்பாக்கத்தில் சாலை மறியல்
ADDED : ஜூன் 20, 2024 01:06 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த சிற்றம்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக அறிவிப்பில்லாத மின்தடையால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த மின் தடையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பகுதிவாசிகள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சிற்றம்பாக்கம் பகுதிவாசிகள் 75க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பேரம்பாக்கம் - கடம்பத்துார் சாலையில் மெட்ரோ வாட்டர் நீரேற்றும் அறை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மப்பேடு காவல் ஆய்வாளர் ரவிக்குமார், கடம்பத்துார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் சென்று சமாதான பேச்சு நடத்தியதையடுத்து பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.