/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 18, 2024 05:55 AM

குருவராஜபேட்டை: அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 70க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் இந்தியன் வங்கியும் செயல்படுகின்றன. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிராமத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்கு முறையாக கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
குறிப்பாக, குருவராஜப்பேட்டை பேருந்து நிறுத்தம் மற்றும் குடியிருப்பு பகுதியின் நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் உருவாகியுள்ளன. மேலும் இந்த கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் இருந்து குடிநீர் குழாயும் செல்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது.
இதுதவிர சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் துர்நாற்றத்தால் கடும் சிரமப்படுகின்றனர். தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என குருவராஜபேட்டை மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் நோய் பரவாமல் தடுக்க, உடனடியாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.