/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 22, 2024 05:48 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்தில் களாம்பாக்கம், கூளூர், மணவூர், கனகம்மாசத்திரம், பழையனூர் என ஒன்றியம் முழுதும் ஒவ்வொரு பருவத்திலும் சுமார் 15 முதல் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இங்கு அறுவடை காலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் குறைந்த விலையில் வழங்கும் ஜே.சி.பி., டிராக்டர், அறுவடை இயந்திரங்களை விவசாயிகள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் பொறியியல் துறையின் கட்டுப்பாட்டில் விவசாய வாடகை இயந்திரங்கள் உள்ளன. இவை சிறு குறு விவசாயிகள் அறுவடை காலத்தில் மழையின் பாதிப்பு இருந்தாலும் முழுதும் அறுவடை செய்து பயன்பெற வேண்டி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி முன்பதிவு செய்து டிராக்டர், அறுவடை இயந்திரம், ஜே.சி.பி., உள்ளிட்ட இயந்திரங்கள் பெறமுடியும். தற்போது இந்த இயந்திரம் திருத்தணி வட்டார வேளாண் அலுவலகத்தில் உள்ளதால் அங்கிருந்து, 20 முதல் 35 கி.மீ., தொலைவிலுள்ள திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் வந்து அறுவடை செய்து செல்ல ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள் வெளியாட்கள் இடம் அறுவடை இயந்திரத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 3,000 ரூபாய் செலவு செய்து அறுவடை செய்கின்றனர்.
டிராக்டர் ஒருமணி நேரத்திற்கு 1,200 ரூபாயும் வழங்குகின்றனர். இது வேளாண் பொறியியல் துறை வாயிலாக கிடைத்தால் டிராக்டர் ஒருமணி நேரத்திற்கு 600க்கும் அறுவடை இயந்திரம் 1,200க்கும் கிடைக்கும். இதனால் திருவாலங்காடு விவசாயிகள் பயன்பெறுவர்.
எனவே விவசாய பணிக்கு பயன்படும் இயந்திரங்களை திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்தில் நிறுத்தி விவசாயிகளுக்கு அறுவடை காலத்தில் அனுப்பி வைத்தால் அவர்களின் செலவு குறையும். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.