/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வேகத்தடை இல்லாததால் அச்சம் வியாசபுரம் வாசிகள் 'திக் திக்' வேகத்தடை இல்லாததால் அச்சம் வியாசபுரம் வாசிகள் 'திக் திக்'
வேகத்தடை இல்லாததால் அச்சம் வியாசபுரம் வாசிகள் 'திக் திக்'
வேகத்தடை இல்லாததால் அச்சம் வியாசபுரம் வாசிகள் 'திக் திக்'
வேகத்தடை இல்லாததால் அச்சம் வியாசபுரம் வாசிகள் 'திக் திக்'
ADDED : ஆக 05, 2024 02:34 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் ரயில்வே யார்டு அருகே அரிசந்திராபுரம், சின்னம்மாபேட்டை மற்றும் வியாசபுரம் கூட்டுச்சாலை சந்திப்பு உள்ளது.
இச்சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதிக போக்குவரத்து உள்ள இச்சாலைகளில், எப்போதும் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கூட்டுச்சாலை அருகே, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
எனவே, வியாசபுரம் நோக்கி செல்லும் சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.