/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மப்பேடில் குப்பை எரிப்பு பகுதிவாசிகள் அவதி மப்பேடில் குப்பை எரிப்பு பகுதிவாசிகள் அவதி
மப்பேடில் குப்பை எரிப்பு பகுதிவாசிகள் அவதி
மப்பேடில் குப்பை எரிப்பு பகுதிவாசிகள் அவதி
மப்பேடில் குப்பை எரிப்பு பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜூலை 27, 2024 02:00 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இந்த ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மண்புழு உரக்கொட்டகை பயன்பாட்டிற்கு வராமலே வீணாகிப் போனது.
இதேபோல் தலா 24 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உரக்கிடங்கும் முறையான பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனால் இங்குள்ள ஆண்கள் சுகாதார வளாகம், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் மற்றும் திடக்கழிவு திட்டம் அருகே குப்பையை குவித்து தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால் இப்பகுதியில் நெடுஞ்சாலை வழியே வாகனங்களில் செல்வோர் நடந்து செல்லும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.