/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மொபைல் போன் டவரில் ஏறி குழந்தையுடன் தந்தை மிரட்டல் 6 மணி நேரத்திற்கு பின் மீட்பு மொபைல் போன் டவரில் ஏறி குழந்தையுடன் தந்தை மிரட்டல் 6 மணி நேரத்திற்கு பின் மீட்பு
மொபைல் போன் டவரில் ஏறி குழந்தையுடன் தந்தை மிரட்டல் 6 மணி நேரத்திற்கு பின் மீட்பு
மொபைல் போன் டவரில் ஏறி குழந்தையுடன் தந்தை மிரட்டல் 6 மணி நேரத்திற்கு பின் மீட்பு
மொபைல் போன் டவரில் ஏறி குழந்தையுடன் தந்தை மிரட்டல் 6 மணி நேரத்திற்கு பின் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 01:28 AM

பொதட்டூர்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 50. இவர், நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக, தன் 7 வயது மகனுடன், அதே பகுதியில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், முருகனை டவரில் இருந்து கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.
இரவு 7:00 மணிக்கு டவரில் ஏறிய முருகனை, ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக குழந்தை மற்றும் முருகனை மீட்டனர்.
போலீசார் விசாரணையில், தனது மனைவி, மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், மகள் என் பேச்சை கேட்காமல் உள்ளார்.
இதுதவிர, என் மீது திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து, என்னை சிறையில் அடைக்க முயற்சியும் நடந்து வருகிறது.
எனவே, நான் தற்கொலை செய்துக் கொள்ள டவரில் ஏறினேன் என தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நிருபர் காயம்
மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் செய்த முருகன், பத்திரிகையாளர்களிடம் என் பிரச்னை குறித்து கூற வேண்டும்.
அவர்கள் என்னிடம் வந்தால் தான் கீழே இறங்குவேன் என கூறியதை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிருபர் டவரில் ஏறி, முருகனை நோக்கி செல்லும் போது, டவரில் இருந்து ஒரு இரும்பு கம்பி, நிருபர் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயத்துடன், நிருபரை பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி பெற்று திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிருபர் காயம்
மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த முருகன், பத்திரிகையாளர்களிடம் என் பிரச்னை குறித்து கூற வேண்டும். அவர்கள் என்னிடம் வந்தால் தான் கீழே இறங்குவேன் என கூறியதை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிருபர் டவரில் ஏறி, முருகனை நோக்கி செல்லும் போது, டவரில் இருந்து ஒரு இரும்பு கம்பி, தொலைக்காட்சி நிருபர் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயத்துடன், நிருபர் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.