/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கோவில் குளத்தை சீரமைத்து சுவர் அமைக்க கோரிக்கை கோவில் குளத்தை சீரமைத்து சுவர் அமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைத்து சுவர் அமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைத்து சுவர் அமைக்க கோரிக்கை
கோவில் குளத்தை சீரமைத்து சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 11:34 PM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் பிரசித்த பெற்ற காளத்தீஸ்வர் கோவில் அருகே அமைந்துள்ளது நெல்லுார் அம்மன் கோவில். அந்த கோவிலின் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் குளம் ஒன்று உள்ளது. அப்பகுதி ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் குளமாகும்.
ஆறு மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், குளம் துார் எடுக்கப்பட்டது.
இருப்பினும், குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து இருப்பதும், சுற்றிலும் புதர்களும் மண்டி இருப்பதும் பக்தர்களின் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது. ஆகையால், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து, சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.