/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதுச்சேரிமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை புதுச்சேரிமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை
புதுச்சேரிமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை
புதுச்சேரிமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை
புதுச்சேரிமேடு சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 11:03 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த சிறுளப்பாக்கம் கிராமத்தில் இருந்து, புதுச்சேரிமேடு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக இருக்கிறது. கடந்த ஆண்டு மழையின்போது, மேற்கண்ட சாலை மழைநீரில் மூழ்கி கிடந்ததுடன், ஆங்காங்கே அரித்து செல்லப்பட்டன.
சாலையின் ஒரு பகுதி மழைநீர் செல்வதற்காக வெட்டி எடுக்கப்பட்டு, மீண்டும் மூடப்படாமல் அதே நிலையில் இருக்கிறது.
தற்போது வரை சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சிறுளப்பாக்கம், புதுச்சேரிமேடு கிராமவாசிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாற்று வழியாக, 5 கி.மீ., சுற்றி அண்ணாமலைச்சேரி வழியாக சென்று வர வேண்டி உள்ளதால் காலவிரயம் ஏற்படுகிறது. மேற்கண்ட சாலையை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.