/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மஞ்சாகுப்பத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை மஞ்சாகுப்பத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை
மஞ்சாகுப்பத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை
மஞ்சாகுப்பத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை
மஞ்சாகுப்பத்தில் பழுதடைந்த அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2024 01:23 AM

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரை பெருமதுார் ஊராட்சிக்கு உட்பட்டது மஞ்சா குப்பம் கிராமம். இங்கு பெருமாள் கோவில் எதிரில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
இங்கு 20க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர்.
மழைக்காலத்தில் கூரை முழுவதும் மழைநீர் தேங்கி ஒழுகுவதால் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. எனவே குழந்தைகளின் நலன் கருதி
மூன்று மாதத்திற்கு முன் மாற்று கட்டடம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது மாற்று கட்டடத்தில் அங்கன்வாடி செயல்படுகிறது.
இந்நிலையில் அங்கு குழந்தைகளுக்கு போதிய இடவசதி மற்றும் கழிப்பறை வசதி இன்றி சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.