/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டி கோரிக்கை திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டி கோரிக்கை
திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டி கோரிக்கை
திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டி கோரிக்கை
திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி வேண்டி கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 04:44 AM
திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் மொத்தம், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல், சமூகபாதுகாப்புதுறை, இ-- சேவை, ஆதார் மையம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு புகைப்படம் எடுக்கும் பிரிவு உள்பட பல்வேறு துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
தினமும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றுகள் பெறுவதற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மின்தடை ஏற்படும் போது, அலுவலக பணிகள் மற்றும் இதர சேவை பணிகளும் நடைபெறுவதில்லை. மின்சாரம் வரும் வரை பயனாளிகள் காத்திருந்து, சான்றுகள் பெற்று செல்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு புதியதாக ஜெனேரட்டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்
இது குறித்து திருத்தணி வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தாசில்தார் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் கடந்த, 2011ம் ஆண்டு முதல் திருத்தணி பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து பரிந்துரை கடிதம் எழுதி வருகிறோம்' என்றார்.
திருத்தணி துணை மின்நிலையத்தில் மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை மின்பராமரிப்பு பணிகளுக்கு காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படும்.
அன்றைய தினம் தாசில்தார் அலுவலகத்தில் எவ்வித அலுவலக பணிகள் மற்றும் சேவை மையங்களும் இயங்காது.
மின்நிறுத்தம் என்பதால் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வெறிச்சோடி கிடைக்கும். மேலும், அன்று தாசில்தார் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படாத விடுமுறையாகும்.