/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல்
கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல்
கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல்
கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 07, 2024 12:35 AM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பிரையாம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 35. இறந்தவர்களுக்கு மேளம் அடிப்பது, பூ மாலை கட்டுவது போன்ற தொழில் செய்து வந்தார்.
இவர், தொழில் போட்டியால் நேற்று முன்தினம் சுடுகாடு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரித்த வெள்ளவேடு போலீசார், திருமழிசை உடையவர் கோவில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை கைது செய்தனர்; இருவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், நாகராஜ் உடல் நேற்று மதியம் 2:00 மணிக்கு பிரேத பரிசோதனைக்கு பின் திருமழிசை கொண்டு வரப்பட்டது.
இதையறிந்த உறவினர்கள் மற்றும் பகுதிவாசிகள், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமரர் ஊர்தி வாகனத்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் உடனே கைது செய்யப்பட வேண்டும்; அவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
வெள்ளவேடு போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால். அப்பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.