/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 12, 2024 09:59 PM

சோழவரம்:சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வர் கோவில், சூரிய பரிகார ஸ்லதமாக அமைந்து உள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷே க விழா விமரிசையாக நடந்தது.
நேற்று காலை, 7:00மணிக்கு, கடகப்புறப்பாடு, அதை தொடர்ந்து, விநாயகர், ரண்யேஸ்வரர், சங்கிலி நாச்சியார் திருமடம் ஆகிய சன்னிதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
காலை, 9: 30மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும், தொடர்ந்து, சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர், விநாயகர், சுப்ரமணியர், பஞ்ச கோஷ்ட தேவைகள், சண்டிகேஸ்வரர், சிவசூரியர், உள்ளிட்ட பரிவார தேவைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷே கம் நடந்தது.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.