/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 40.67 கோடி கிலோ நெல் திருவள்ளூரில் கொள்முதல் 40.67 கோடி கிலோ நெல் திருவள்ளூரில் கொள்முதல்
40.67 கோடி கிலோ நெல் திருவள்ளூரில் கொள்முதல்
40.67 கோடி கிலோ நெல் திருவள்ளூரில் கொள்முதல்
40.67 கோடி கிலோ நெல் திருவள்ளூரில் கொள்முதல்
ADDED : ஜூன் 28, 2024 10:58 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நவரை பருவத்தில், 6,219 விவசாயிகளிடம் இருந்து, 40.67 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை நெல் அறுவடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக 61, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் வாயிலாக 4 என, மொத்தம் 65 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,219 விவசாயிகளிடமிருந்து 40.67 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராபிப் பருவத்தில் குறைந்தபட்ச விலை ஆதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 486 விவசாயிகளிடமிருந்து 4.89 லட்சம் கிலோ பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 3 கோடியே 36 லட்சத்து 41 ஆயிரத்து 498 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.