/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொள்முதல் அளவு குறைப்பால் தவிப்பு பயறு பயிரிட்டோர் கலெக்டரிடம் மனு கொள்முதல் அளவு குறைப்பால் தவிப்பு பயறு பயிரிட்டோர் கலெக்டரிடம் மனு
கொள்முதல் அளவு குறைப்பால் தவிப்பு பயறு பயிரிட்டோர் கலெக்டரிடம் மனு
கொள்முதல் அளவு குறைப்பால் தவிப்பு பயறு பயிரிட்டோர் கலெக்டரிடம் மனு
கொள்முதல் அளவு குறைப்பால் தவிப்பு பயறு பயிரிட்டோர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 06, 2024 10:53 PM
பொன்னேரி:மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில், சம்பா நெல் அறுவடைக்கு பின், பச்சை பயறு பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு பச்சை பயறு பயிரிடப்பட்ட விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் நிலையங்களில், 1 கிலோ, 85.58 ரூபாய்க்கு பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பச்சை பயறு பயிரிட்ட விவசாயிகள் அறுவடைக்கு பின், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் பகுதியில் இயங்கி வரும் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர்.
வெளி சந்தையைவிட, அரசு கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலை கிடைப்பதால், அங்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், கொள்முதல் இலக்கு முடிந்தவிட்டதாக கூறி, தற்போது விவசாயிகள் வைத்திருக்கும் பச்சை பயறுகளை கொள்முதல் நிலையத்தில் பெறாமல், விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டு மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் பரிந்துரை படி, 400 மெட்ரிக் டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, 300 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டு விட்டதாகவும், கொள்முதல் இலக்கு முடிந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் 16ம் தேதி கொள்முதல் இலக்கை, 400 மெட்ரிக் டன்னில் இருந்து, கூடுதலாக 200 மெட்ரிக் டன் பெற வேண்டும் எனக்கூறி மனு அளித்திருந்தோம்.
அதன் மீது நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது ஏற்கனவே அறிவித்ததில் இருந்து, 100 மெட்ரிக் டன் குறைக்கப்பட்டிருப்பது விவசாயிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து, பச்சை பயறுகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.