/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் வலியுறுத்தல் அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் வலியுறுத்தல்
அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் வலியுறுத்தல்
அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் வலியுறுத்தல்
அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 05:53 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 --- 8ம் வகுப்பு வரை 330க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளியில் அதிக மாணவர்கள் பயிலும் பள்ளியாக உள்ளது. இதில் 170க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்கள் மேல்நிலை கல்வி பயில அரிச்சந்திராபுரத்தில் இருந்து, 7 முதல், 13 கி.மீ., தூரமுள்ள திருவாலங்காடு அல்லது அரக்கோணம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது.
ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால் பெண் குழந்தைகளை வெளி ஊர்களுக்கு சென்று பயில பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு இடைநிற்றல் தொடர்வது தொடர் கதையாகி வருகிறது.
எனவே அரிசந்திராபுரம் நடுநிலை பள்ளி யை வரும் கல்வியாண்டில், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.