/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜல்லி கற்களாக மாறிய பனப்பாக்கம் சாலை ஜல்லி கற்களாக மாறிய பனப்பாக்கம் சாலை
ஜல்லி கற்களாக மாறிய பனப்பாக்கம் சாலை
ஜல்லி கற்களாக மாறிய பனப்பாக்கம் சாலை
ஜல்லி கற்களாக மாறிய பனப்பாக்கம் சாலை
ADDED : ஜூலை 07, 2024 01:15 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை -- பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பாலவாக்கம் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்கில் எதிர்சாலையில் செல்லும் பகுதியில் உள்ளது பனப்பாக்கம் கிராமம்.
இங்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.
இந்த பனப்பாக்கம் செல்லும் தார் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன.
மேலும், கிராமத்தில்தார் மற்றும் மணல் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளன. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், கிராம மக்கள் டூ - வீலர்களில் மட்டுமே செல்ல வேண்டி உள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் செல்லும்போது, டயர் பஞ்சராகி விடுகிறது.மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு செல்லும்போது, கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பனப்பாக்கம் கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.