/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எல்லாபுரத்தில் 310 பேருக்கு இலவச வீடு கட்ட ஆணை எல்லாபுரத்தில் 310 பேருக்கு இலவச வீடு கட்ட ஆணை
எல்லாபுரத்தில் 310 பேருக்கு இலவச வீடு கட்ட ஆணை
எல்லாபுரத்தில் 310 பேருக்கு இலவச வீடு கட்ட ஆணை
எல்லாபுரத்தில் 310 பேருக்கு இலவச வீடு கட்ட ஆணை
ADDED : ஆக 03, 2024 11:48 PM
ஊத்துக்கோட்டை:குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கும் நோக்கில் கலைஞர் வீடு கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, ஒவ்வொரு வீடு கட்ட அரசு 3.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவி வழங்கும் விழா நடந்தது. பி.டி.ஓ., ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று ஒன்றியத்தில் உள்ள, 310 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆணையை வழங்கினார்.