/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஐ.டி.ஐ.,யில் 100 சதவீதம் மாணவர்களை சேர்க்க உத்தரவு ஐ.டி.ஐ.,யில் 100 சதவீதம் மாணவர்களை சேர்க்க உத்தரவு
ஐ.டி.ஐ.,யில் 100 சதவீதம் மாணவர்களை சேர்க்க உத்தரவு
ஐ.டி.ஐ.,யில் 100 சதவீதம் மாணவர்களை சேர்க்க உத்தரவு
ஐ.டி.ஐ.,யில் 100 சதவீதம் மாணவர்களை சேர்க்க உத்தரவு
ADDED : ஜூன் 03, 2024 04:21 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திறன் குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:
அரசு தொழில் பயிற்சி மையத்தில், 100 சதவீதம் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் இணைந்து, மாணவர்கள் சேர்க்கைக்கு பணி மேற்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலை நிறுவனங்களுடன் சிறந்த திறன் கொண்ட பயிற்சியாளர்களை தேவைக்கேற்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பயிற்சி அளிக்க வேண்டும். பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, ஊக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.