ADDED : ஜூலை 22, 2024 06:08 AM

புழல்: புழல், கதிர்வேடு அணுகு சாலையில், நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை, ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த ரோந்து போலீசார், புழல் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
விசாரணையில், புழல், புத்தகரத்தைச் சேர்ந்த குமார், 34, என தெரிந்தது. இவர் மீது வழிப்பறி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.