/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் கால்நடைகள் உலா ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள் சாலையில் கால்நடைகள் உலா ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
சாலையில் கால்நடைகள் உலா ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
சாலையில் கால்நடைகள் உலா ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
சாலையில் கால்நடைகள் உலா ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
ADDED : ஜூன் 07, 2024 02:07 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில் ஜே.என்.சாலை, பெரியகுப்பம் ரயில் நிலைய சாலை, சி.வி.நாயுடு சாலை மற்றும் செங்குன்றம் சாலைகளில் கால்நடைகள் உலா வருகின்றனர்.
கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும்; சாலையில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் எச்சரிக்கை விடுத்த ஓரிரு நாட்கள் மட்டும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறையினர் சாலையில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அதன்பின், அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.
தற்போதும், சாலைகளில் கால்நடைகள் ஜாலியாக உலா வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையில் திரியும் கால்நடைகள் திடீரென ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, வாகனங்கள் மீது மோதுவதால், அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன.
வாகனங்கள் சேதமடைவதுடன், அவற்றில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.