Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தாமதமாக வந்த அதிகாரிகள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தாமதமாக வந்த அதிகாரிகள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தாமதமாக வந்த அதிகாரிகள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தாமதமாக வந்த அதிகாரிகள்

ADDED : ஜூலை 27, 2024 07:32 AM


Google News
திருத்தணி : திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில், ஊரக வளர்ச்சி துறை, கால்நடை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, வீட்டுவசதி வாரியம், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காலை, 9:00 மணிக்கு முகாம் துவங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், காலை, 8:45 மணிக்கே, வருவாய் துறை தவிர மீதமுள்ள அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிற்கு வந்திருந்தனர்.

காலை, 9:15 மணிக்கு திருத்தணி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சந்திரன் முகாமை துவங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

அப்போது மூதாட்டி ஒருவர், வீட்டுமனை பட்டா கேட்டு எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தார். மனுவை பெற்ற எம்.எல்.ஏ., சந்திரன், வருவாய் துறை அதிகாரிகளை அழைத்த போது கோட்டாட்சியர், தாசில்தார், துணை தாசில்தார் வராமல் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து எம்.எல்.ஏ., சந்திரன், மொபைல் போன் மூலம் கலெக்டர் பிரபுசங்கரை தொடர்பு கொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு காலை, 10:00 மணிக்கு மேல் ஆகியும் இதுவரை வருவாய் துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் தாமதமாக வந்தால் எப்படி முதல்வரின் திட்டம் பொதுமக்களிடம் சென்றடையும் என பேசினார்.

தொடர்ந்து தாசில்தார் மலர்விழி, காலை, 10:20 மணிக்கும், வருவாய் கோட்டாட்சியர் தீபா, காலை, 10:40 மணிக்கும் முகாமிற்கு வந்தனர். அப்போது எம்.எல்.ஏ., தாசில்தாரிடம், முதலில் வரவேண்டிய வருவாய் துறை அதிகாரிகள் லேட்டாக வந்தால் எப்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் என கூறினார்.

ஏழு ஊராட்சிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனு கொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us