/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல் பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல்
பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல்
பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல்
பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 17, 2024 12:43 AM

திருவள்ளூர், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தினமும் நெரிசல் நிலவுகிறது.
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், தி.நகர், வடபழனி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கோயம்பேடிற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள், பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி, தெற்கு குளக்கரை தெரு வழியாக, காமராஜர் சிலை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.
மேலும், திருப்பதியில் இருந்து சென்னை கோயம்பேடு செல்லும் பேருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.
இங்கு கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் பூக்கடை, பழக்கடை மற்றும் காய்கறி கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பேருந்து நிறுத்தத்தில் வெளியில் பேருந்துகள் நிற்கின்றன. மேலும், ஆட்டோக்களும் பேருந்து நிறுத்தத்தை மறைத்தபடி நின்று செல்கின்றன.
இதன் காரணமாக, காமராஜர் சாலை சந்திப்பில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றி, நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.