/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ADDED : ஜூன் 28, 2024 02:37 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பாடதிட்ட பயிற்சி நடந்து வருகிறது.
ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடந்து வரும் இந்த பயிற்சியில், ஒன்றியத்திற்கு உட்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.
இதில், பங்கேற்ற ஆசிரியர்கள், பாடதிட்டத்திற்காக தாங்கள் தயாரித்துள்ள துணை கருவிகள் மற்றும் புதிய நுட்பங்கள் குறித்து இந்த பயிற்சியில் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை துாண்டும் விதமாக கற்றல் நுட்பங்களை வெளிப்படுத்திய ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பயிற்சிக்கு, ஆர்.கே.பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் கிரிஜா மற்றும் வெங்கடேஸ்வரலு தலைமை வகித்தனர்.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.