/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 3 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை திருப்பாச்சூரில் கிராமவாசிகள் முற்றுகை 3 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை திருப்பாச்சூரில் கிராமவாசிகள் முற்றுகை
3 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை திருப்பாச்சூரில் கிராமவாசிகள் முற்றுகை
3 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை திருப்பாச்சூரில் கிராமவாசிகள் முற்றுகை
3 மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை திருப்பாச்சூரில் கிராமவாசிகள் முற்றுகை
ADDED : ஜூன் 17, 2024 03:56 AM

திருப்பாச்சூர் : பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மொத்தம், 12 வார்டுகள் உள்ள இந்த கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், குழாய் அமைத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலானாதால், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், ஊராட்சி முழுதும் குடிநீர் கிடைக்காமல் கிராமவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி தலைவரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் நேற்று முன்தினம் திருப்பாச்சூர் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'ஏற்கனவே பழுதான 10க்கும் மேற்பட்ட மோட்டார்கள் அகற்றி, புதிதாக அமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், அந்த மோட்டார்கள் என்ன ஆனது என தெரியவில்லை.
மாயமான மோட்டார்களை உடனடியாக ஊராட்சி நிர்வாகம், மீட்டு புதிதாக அமைத்தால் மட்டுமே எங்களுக்கு குடிநீர் கிடைக்கும்' என ஆவேசமாக தெரிவித்தனர். ஊராட்சி துணை தலைவர் கெத்சியாள் வசந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் சமதானப்படுத்தினர்.
ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் புதிய மோட்டார் அமைக்கப்பட்டு, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.