/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இயற்கை உரம்!கொடிவலசா ஊராட்சியில் விற்பனைக்கு தயார்: மட்கும் குப்பையில் கொட்டும் வருமானம் இயற்கை உரம்!கொடிவலசா ஊராட்சியில் விற்பனைக்கு தயார்: மட்கும் குப்பையில் கொட்டும் வருமானம்
இயற்கை உரம்!கொடிவலசா ஊராட்சியில் விற்பனைக்கு தயார்: மட்கும் குப்பையில் கொட்டும் வருமானம்
இயற்கை உரம்!கொடிவலசா ஊராட்சியில் விற்பனைக்கு தயார்: மட்கும் குப்பையில் கொட்டும் வருமானம்
இயற்கை உரம்!கொடிவலசா ஊராட்சியில் விற்பனைக்கு தயார்: மட்கும் குப்பையில் கொட்டும் வருமானம்
ADDED : ஜூன் 01, 2024 06:15 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், கொடிவலசா ஊராட்சியில், மட்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. 1 கிலோ மண்புழு உரம், 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கொடிவலசா ஊராட்சிக்கு உட்பட்டது அத்திமாஞ்சேரிபேட்டை. அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலையடிவாரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், ஏற்கனவே குப்பையை பிரித்தெடுக்க பிரத்யேக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மட்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடிவலசா ஊராட்சியில், நாள் ஒன்றுக்கு, 1.5 டன் குப்பை பெறப்படுகிறது. இதில், மட்கும் குப்பையாக, 300 முதல் 500 கிலோ வரை கிடைக்கிறது.
மட்கும் குப்பையாக இலை, காய்கறி கழிவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த கழிவுகளை மட்டும் தொட்டிகளில் மட்க வைத்து, மண்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மட்கும் குப்பையை உணவாக உட்கொள்ளும் மண்புழுக்களின் கழிவு, இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.
மட்கும் குப்பை சேகரிக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த குப்பை மட்கவும், அதை மண்புழுக்கள் உணவாக உட்கொண்டு கழிவுகளை வெளியேற்ற, 90 முதல் 100 நாட்கள் வரை ஆகின்றன. நீண்ட கால செயலாக இருந்தாலும், இந்த முறையில் கிடைக்கும் இயற்கை உரத்திற்கு, விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே,பேட்டை ஒன்றியங்களில் முதல் முறையாக கொடிவலசா ஊராட்சியில் தற்போது, 400 கிலோ அளவிற்கு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த இயற்கை உரம், 1 கிலோ 30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை உரம் தயாரிக்கும் பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் சுற்றுப்பகுதியில், பாரம்பரியமாக வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு இங்கிருந்து வாழை மரக்கன்றுகள், வாழை தார், வாழை இலை உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வாழை விவசாயம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களால், அத்திமாஞ்சேரிபேட்டையில் வாழை கழிவுகள் தினசரி அதிகளவில் கிடைக்கிறது. இது மண்புழு உரம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.