/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை நடுவில் பழுதான மின்விளக்குகள் சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் சாலை நடுவில் பழுதான மின்விளக்குகள் சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள்
சாலை நடுவில் பழுதான மின்விளக்குகள் சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள்
சாலை நடுவில் பழுதான மின்விளக்குகள் சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள்
சாலை நடுவில் பழுதான மின்விளக்குகள் சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள்
ADDED : ஜூன் 22, 2024 12:19 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரின் பிரதான சாலைகளில் பழுதடைந்த மின் விளக்குகளை நகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 87 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர்.
திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, தேரடி, செங்குன்றம் சாலை, பெரியகுப்பம் - ரயில் நிலைய சாலை ஆகியவை முக்கிய போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.
மேலும், ஜவஹர் நகர், ஜெயா நகர், பூங்கா நகர் ராஜாஜிபுரம் மற்றும் காக்களூர் ஊராட்சிக்கு ஒட்டிய பகுதிகளான, பூங்கா நகர், வி.எம்.நகர் என, 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 5,500 மின் விளக்கு, 20 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, இந்த மின் விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி., பல்பாக மாற்ற, நகராட்சி நிர்வாகம் 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த விளக்குகளை உரிய முறையில் பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு, 10 ஆண்டு ஒப்பந்தம்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகம் எதிரில், மற்றும் டோல்கேட் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சில நாட்களாக ஒரு சில இடங்களில் மின்விளக்கு பழுதாகியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசர் ஆகியோர், ஒப்பந்ததாரரிடம் மின் விளக்குகளை மாற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று காலை முதல் மின்விளக்கு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்றும் தொடர உள்ளதாக, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.