/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ களாம்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள் களாம்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
களாம்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
களாம்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
களாம்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 30, 2024 12:22 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கத்தில் கூவம் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றை கடந்து இப்பகுதிவாசிகள் நரசிங்கபுரம், பேரம்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இப்பாலத்தின் சாலை தற்போது சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து மற்றும் பள்ளம் மேடாக காணப்படுகிறது.
தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று வரும் நிலையில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் தாமாக விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
பாலம் கட்டி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் உயர்மட்டப்பால சாலை சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உயர்மட்டப்பால சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.