/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆறு வழிச்சாலை பணி அமைச்சர் திடீர் 'விசிட்' ஆறு வழிச்சாலை பணி அமைச்சர் திடீர் 'விசிட்'
ஆறு வழிச்சாலை பணி அமைச்சர் திடீர் 'விசிட்'
ஆறு வழிச்சாலை பணி அமைச்சர் திடீர் 'விசிட்'
ஆறு வழிச்சாலை பணி அமைச்சர் திடீர் 'விசிட்'
ADDED : ஜூலை 25, 2024 11:29 PM
ஊத்துக்கோட்டை:தச்சூர் -- சித்துார் இடையே ஆறுவழிச் சாலை பணி, 3.197 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தமிழகத்தில் 41 கி.மீட்டர், ஆந்திராவில் 75 கி.மீட்டர் துாரம் என, மொத்தம் 116 கி.மீட்டர் துாரம், 70 மீட்டர் அகலத்தில் இச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவை அமைய உள்ளன. இச்சாலை 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைய உள்ளது.
வரும் 2025 டிச., மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது, தமிழகம், ஆந்திராவில் சாலை பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
அதேபோல், மாமல்லபுரம் -- எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 கி.மீட்டர், திருவள்ளூர் மாவட்டத்தில், 91 கி.மீட்டர் என, மொத்தம் 133 கி.மீ., தொலைவிற்கு சாலை பணி நடந்து வருகிறது.
நேற்று, திருத்தணியில் புறவழிச்சாலையை திறக்க சென்ற தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரியபாளையம் அடுத்த ஜெயபுரம், வெங்கல் அடுத்த கரிக்கலவாக்கம் பகுதியில் நடக்கும் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
சாலை பணி தரத்துடனும், குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். பின், திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் சென்று கோப்புகளை சரிபார்த்தார்.