/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மண் கொட்டி துார்க்கப்பட்ட பாலம் மீசரகாண்டாபுரம் பகுதியினர் அவதி மண் கொட்டி துார்க்கப்பட்ட பாலம் மீசரகாண்டாபுரம் பகுதியினர் அவதி
மண் கொட்டி துார்க்கப்பட்ட பாலம் மீசரகாண்டாபுரம் பகுதியினர் அவதி
மண் கொட்டி துார்க்கப்பட்ட பாலம் மீசரகாண்டாபுரம் பகுதியினர் அவதி
மண் கொட்டி துார்க்கப்பட்ட பாலம் மீசரகாண்டாபுரம் பகுதியினர் அவதி
ADDED : ஜூன் 09, 2024 11:04 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மீசரகாண்டாபுரம் கிராமத்தில் மேற்கில், சானுார் மல்லாவரம் மற்றும் சகஸ்ரபத்மாபுரம் கிராமங்களுக்கு இடையே ஓடை பாய்கிறது.
மழைக்காலத்தில் தொடர்ந்து வெள்ளம் பாய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சானுார் மல்லாவரம் மற்றும் சகஸ்ரபத்மாபுரம் இடையே தார் சாலை அமைக்கப்பட்டது.
இதில், ஓடையின் குறுக்கே பாலமும் கட்டப்பட்டது.
இந்த பாலம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால், இந்த மார்க்கமாக பயணிக்க முடியாமல் கிராமத்தினர் அவதிப்பட்டு வந்தனர்.
சமீபத்தில் இந்த பாலத்தின் உடைந்த பகுதியில், மண் கொட்டி துார்க்கப்பட்டது. துார்க்கப்பட்ட பாலத்தின் வழியாக தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது.
ஆனால், வரும் மழைக்காலத்தின் போது, ஓடையில் வெள்ளம் தடைபட நேரிடும்.
வயல்வெளியில் வெள்ளம் புகும்நிலை ஏற்படும், பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மீசரகாண்டாபுரம் கிராம வயல்வெளிக்கு வெள்ளம் தடைபடும் என்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாலத்தில் கொட்டப்பட்டுள்ள மண் அகற்றப்பட்டு, பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.